tamilnadu

img

எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் பொறியியல்

எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் பொறியியல் மற்றும் தொழில் நுட்பத் துறை சார்பில் ‘சமூக வளர்ச்சிக்கான கண்டுபிடிப்புகளின் முன்னோடி’  பற்றி 2 நாள் தேசிய மாநாடு நடைபெறுகிறது. இதன் தொடக்க  விழா எஸ்.ஆர். எம் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டினை மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.ராஜகோபால் துவக்கிவைத்தார்.  மும்பை டாடா ஆராய்ச்சி மைய பேராசிரியர் டாக்டர் அதுல் குருது, புவியியல் வல்லுநர் டாக்டர் சந்திர தாகூர் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.