100 நாள் திட்டத்தில் முழு கூலி வழங்க வேண்டும் கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்
திருவள்ளூர், அக்.12- திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகிலுள்ள தடப் பெரும்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் சனிக்கிழமை (அக்.11) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், விவசாய தொழி லாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். சங்கத்தின் பொன்னேரி பகுதி தலைவர் எஸ்.பாஸ்கரன் உள்ளிட்ட கிராமமக்கள் பங்கேற்று, நூறு நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், முழு கூலி வழங்க வேண்டும். வேண் பாக்கம் மாதா சிலை முதல் தடப்பெரும்பாக்கம் தொடக்கப் பள்ளி வரையிலான சாலை மற்றும் குண்டும் குழியுமாக உள்ள ஏரிக்கரை ஒன்றிய சாலைகளை விரைவில் சீர மைக்க வேண்டும். ஊராட்சி பகுதிகளில் உள்ள குப்பை களை தினமும் அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.