tamilnadu

img

கேங்மேன் ஊழியர்களை கள உதவியாளர்களாக பதவி உயர்த்த மின் ஊழியர் மாநாடு கோரிக்கை

கேங்மேன் ஊழியர்களை கள உதவியாளர்களாக பதவி உயர்த்த மின் ஊழியர் மாநாடு கோரிக்கை 

கிருஷ்ணகிரி, ஜூலை 21 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின்  4 வது மாவட்ட மாநாடு  கிருஷ்ண கிரியில் நடைபெற்றது. தலைவர் துரை தலைமை தாங்கினார் துணைத் தலைவர் சதீஷ்குமார் சங்க கொடி ஏற்றினார்.இணைச் செயலாளர் சிவசங்கரன் வரவேற்றார்.வேலூர் மண்டல செயலாளர் கோவிந்தராஜ் துவக்க உரை யாற்றினார். செயலாளர் கருணாநிதி வேலை அறிக்கையையும் பொருளாளர் முனுசாமி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப் பித்தார். மாநில பொதுச் செயலாளர் அருட்செல்வன்,துணைத் தலைவர் ஜோதி, சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், ஒருங்கி ணைப்பு குழு மாநில துணை அமைப்பாளர் மீனா ஆகியோர் வாழ்த்தி பேசினர். மின் வாரியத்தை பொதுத்துறையாக பாதுகாத்திட,63,000 காலி பணியிடங்களை நிரப்பிட, 2022 சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். 6  ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒப்பந்த தொழிலா ளர்களை  மின்வாரியமே நேரடியாக தின ஊதியம் வழங்க வேண்டும், இதே நிலை யில் உள்ள பகுதி நேர பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் நிறைவுறையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா தேசிங்கு நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு தலைவராக பி.துரை, செயலாளராக கே.முனிசாமி, பொருளாளராக பி.சிவசங்க ரன் உட்பட13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.