tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

இன்ஸ்டாகிராமிலும் எடிட் செய்யும் வசதி!

வாட்ஸ்அப்பை தொட ர்ந்து இன்ஸ்டாகிரா மிலும் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் அறி முகம் செய்துள்ளது.  மெசேஜ் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் அதனை எடிட் செய்துகொள்ளலாம். 

இதைத் தொடர்ந்து, சாட்களை பின் (Pin) செய்யும் வசதி, Read Re ceipts ஆப்ஷனை நிறுத்தி வைக்கும் வசதி, ஸ்டிக்கர் வசதி, தீம் செட்டிங் (Theme Setting) ஆகிய வசதிகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. 

பின் (Pin) செய்யும் வசதியின் மூலம் பயனர்கள் 3 குரூப் சாட்கள் (Group Chats) அல்லது 3 தனிநபர் சாட்களை (Individual Chats) பின் செய்துகொள்ள முடியும். 

Read Receipts ஆப்ஷனை அனைத்து சாட்களுக்கும் அல்லது சில குறிப்பிட்ட சாட்களுக்கு மட்டும் நிறுத்திவைக்கும் வகையில் இந்த அம்சம் பயனர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. Read Receipts-ஐ நிறுத்த Account Settingsக்கு சென்று ‘Mess ages and story replies’ என்ற ஆப்ஷ னை க்ளிக் செய்தால் Show Read Receipts காண்பிக்கும். அதில் Read Receipts-ஐ ON அல்லது OFF செய்துகொள்ள முடியும்.

இதைத் தொடர்ந்து டாஸ்போ ர்ட்டில் (DashBoard) வழங்கப் பட்டுள்ள ஸ்டிக்கர்களை க்ளிக் செய்தால் அதனை சேமித்துக் கொள்ள முடியும். மேலும், தனிநபர் சாட்களுக்கு Love, Lollipop and Avatar ஆகிய புதிய தீம்களும் பய னர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ்: விரைவில் வளாகத்தின் நுழைவு வாயிலை காண்பிக்கும் வசதி!

கூகுள் மேப்ஸில் (Goo gle Maps), ஒரு வளா கத்தின் நுழைவு மற்றும் வெளி யேறும் வாயிலை பயனர்களுக்கு காண்பிக்கும் அம்சத்தை கூகுள் நிறு வனம் சோதனை செய்து வருகிறது.

இதுகுறித்து ஆண்டராய்ட் போலீஸ் என்ற தளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, கூகுள் மேப்ஸ் version 11.17.0101 இல் ஆண்டராய்டு இயங்கு தளத்தில் இந்த சோதனை மேற்கொள் ளப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயி லை காண்பிக்கும் வசதி சோதனை முறையில் தற்போது ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வணிக வளாகங்கள், உணவகங்கள் (Restaurants) உள்ளிட்ட வளா கங்களின் நுழைவு மற்றும் வெளி யேறும் வாயில்களை காட்டும் வசதி வழங்கப்பட்டுள்ளது. சோதனைக் குப் பின், இந்த வசதி அனைத்து கூகுள் மேப்ஸ் பயனர்களுக்கும் வழ ங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படு கிறது.

‘கோபைலட்’ சாட்பாட் பாதுகாப்பானது அல்ல - மென்பொறியாளர் எச்சரிக்கை

‘கோபைலட்’ (Copilot) எனும் ஏ.ஐ  சாட்பாட் பாதுகாப்பானது அல்ல  என்று மைக்ரோசாப்ட் நிறுவனத் தின் மென்பொறியாளர் அந்நிறு வனத்தை எச்சரித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொத்தமான ‘கோபைலட்’ எனும்  செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  அறிமுகம் செய்தது. இந்த சாட்பாட் பயனர்களிடம் தரவுகளை பெற்றுக் கொண்டு அதற்கு ஏற்றார்போல் படங்கள், இசை போன்றவற்றை உரு வாக்கக்கூடியது. இந்த நிலையில், ‘கோபைலட்’ (Copilot) சாட்பாட் பாது காப்பானது அல்ல என்று மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் மென் பொறியாளர் ஷேன் ஜோன்ஸ் அந்நிறுவனத்தை எச்சரித்துள்ளார். கோபைலட் சாட்பாட்,  வன்முறை யை தூண்டும் படங்கள் மற்றும் ஆபாச மான படங்கள் உருவாக்கும் வகை யில் உள்ளதாக மென்பொறியாளர் ஷேன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். 

மைக்ரோசாப்ட் நிர்வாகத்திடம் இதுதொடர்பான சிக்கல்களை பல முறை எச்சரித்தும், எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என்பதால், தற்போது Federal Trade Commis sion மற்றும் மைக்ரோசாப்ட் இயக்கு நர்கள் குழுவிற்கு தகவல் தெரிவித்து ள்ளதாக ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.