மாதவரம் அரசு மருத்துவமனையில் நாய் தொல்லை
சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம் 27வது வார்டுக்கு உட்பட்ட அரசு பொதுமருத்துவமனை உள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அருகில் உள்ள இந்த மருத்துவமனை முறையான பராமரிப்பின்றி உள்ளது. அப்பகுதியில் உள்ள தெருநாய்களின் புகழிடமாக அம்மருத்துவமனை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரி விக்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் பாதுகாவலர்கள் (செக்யூரிட்டி) இல்லாததால் உள்நோயாளிகளுக்கும் பணியில் உள்ள செவிலியர்க ளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. சமூக விரோதிகளின் மதுக்கூடார மாக மாறிவருவதாக கூறப்படுகிறது. ஆகவே அரசு சுகாதாரத்துறை உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.