சென்னை, ஜன. 8- டெல்டா அல்லாத 38 மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித்துணைத் தலை வர் துரைமுருகன், திரு வண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் விளைச்சல் அதிகள வில் இருப்பதாலும், அங்கு அரசு நெல் கொள்முதல் செய்யாத காரணத்தினால் தனிப்பட்ட விவசாயி களுக்குக் குறைந்த விலை யில் நெல்லை விற்கும் நிலை உள்ளதால் நெல் கொள் முதல் நிலையம் திறக்கப்ப டுமா? என்றார். இதற்குப் பதிலளித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நெல் வரத்து அதிகமாக இருக்கக் கூடிய டெல்டா அல்லாத மாவட்டங் களில் மட்டும் 38 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக வும், நெல் விளைச்சல் எங் கெங்கு அதிகளவில் இருக்கி றதோ அந்தந்த இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார். திமுக உறுப்பினரின் மற்றொரு கேள்விக்குப் பதி லளித்த அமைச்சர் எங்கெல் லாம் விளைச்சல் அதிகமாக இருக்கிறதோ அந்த மாவட் டங்களில் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்து அரசு ஆய்வு செய் யும் என்றும் கூறினார்.