tamilnadu

img

சாதிவாரி கணக்கெடுப்பில் புலம்பெயர்ந்தவர்கள் விவரங்களும் சேகரிக்கப்படும்....

சென்னை:
சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் தனது பணியை தொடங்கியுள்ளது.உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு சம் பந்தமான வழக்குகளை எதிர் கொள்ள தேவையான சாதிவாரி புள்ளி விவரங்களை பெறுவதற்கும் தமிழகம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி ஏ.குலசேகரன், ஆணையத்தின் தலைவராக 21-ந்தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள  அலுவலகத்தில் நீதிபதி குலசேகரன் தனது பணியை தொடங்கினார். சாதிவாரி கணக் கெடுப்பு தொடர்பான பணிகளை எந்த அடிப்படையில் மேற்கொள்ளலாம் என்பது குறித்து பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் அதுல் ஆனந்த், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை இயக்குனர் மதிவாணன், தமிழக மக்கள் தொகை கணக் கெடுப்பு துறை இயக்குனர் ரஜினிகாந்த் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  எந்த அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகளை மேற்கொண்டால் அதை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பது குறித்து ஆலோசிக்கப் பட்டது. கடந்த 1970-ம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட சட்டநாதன் ஆணையம், 1985-ம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட அம்பாசங்கர் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோரிடம் இருந்து மனுக்கள் பெற முடிவு செய்யப் பட்டுள்ளது. மாவட்டம்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதுதவிர கருத்தரங்குகள் மூலம் சாதிவாரியான புள்ளி விவரங்களை பெறவும் முடிவு செய்துள்ளோம். தேவைப்பட்டால் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முடிவு செய் யப்படும்.இந்த கணக்கெடுப்பின்போது புலம் பெயர்ந்தவர்களின் விவரங்களும் சேகரிக்கப்படும். 6 மாதத்துக்குள் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது என்றார் அவர்.

;