tamilnadu

img

பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை, நவ. 22– மத்திய அரசைக் கண்டித்து நவ.26 தேதியன்று நடைபெற வுள்ள பொதுவேலை நிறுத்தத் திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகை யில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மற்றும் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட் டனர். தொழிலாளர் விரோத சட்ட திருத்தம், புதிய வேளாண் சட்டங் கள், மின்சார திருத்தச் சட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம், ஆகிய வற்றை ரத்து செய்ய வேண்டும். ரயில்வே, வங்கி, காப்பீடு, விமான நிலையங்கள், தொலைத் தொடர்பு, மின்சாரம், பொதுப் போக்குரத்து, பெட்ரோலிய நிறு வனங்கள் ஆகியவற்றை தனியார் மயமாக்கக் கூடாது. கொரோனா வைக் காரணம் காட்டி இயக்கப் படாமலுள்ள என்டிசி தொழிற் சாலைகளை உடனடியாக இயக் கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி நவ.26 ஆம் தேதி நடை பெறவுள்ள தொழிற்சங்கங்களின் பொதுவேலை நிறுத்த கோரிக்கை களை முன்வைத்து அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக் கைக் குழுவினர் பெருந்திரள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட் டத் தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஐஎன்டியுசி என்.துளசிதாஸ், பி.சண்முகம், ஏஐடியுசி எம்.ஆறு முகம், ஆர்.ஏ.கோவிந்தராஜன், எச்எம்எஸ் டி.எஸ்.ராஜாமணி, க.வீரசாமி, எல்பிஎப் மு.ரத்தின வேலு, ப.மணி, எம்எல்எப் மு. தியாகராஜன், ஆ.பழனிசாமி, ஏஐ சிசிடியு ஆர்.தாமோதரன், லூயிஸ் கே.தாமஸ், எஸ்டிடியு அப்துல் ரஹீம், ரபீக் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.

 அவிநாசி

இதே கோரிக்கைகளை முன் வைத்து திருப்பூர் மாவட்டம், அவி நாசியில் அனைத்து தொழிற்சங் கத்தினர் இருசக்கர வாகன பிரச் சாரத்தில் ஈடுபட்டனர். அவிநாசி, தெக்கலூர், கருவலூர், பெரியாயி பாளையம், வஞ்சிபாளையம், ராக்கியாபாளையம், கணியாம் பூண்டி, மங்கல ரோடு உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இப்பிரச்சார இயக் கத்தில், சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சங்கத்தின் மாநிலத் தலை வர் முத்துச்சாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட நிர்வாகி எஸ். வெங் கடாசலம், ஏஐடியூசி இசாக், செல் வராஜ், எம்எல்எப் பெருமாள் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.