tamilnadu

img

டிச.8 பாரத் பந்த்திற்கு தமிழக, புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு.... பேரணி - மறியல் நடத்த முடிவு

சென்னை:
விவசாய விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டிசம்பர் 8 அன்று விவசாயிகள் நடத்தும் பாரத்பந்த் போராட்டத்திற்கு  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் தலைவர்கள் ஜி.சுகுமாறன் (சிஐடியு),கி.நடராஜன் (எல்பிஎப்), டி.எம்.மூர்த்தி (ஏஐடியுசி), மு.சுப்பிரமணியன் (எச்எம்எஸ்), டி.வி.சேவியர் ( ஐஎன்டியுசி), வி.சிவகுமார் (ஏஐயுடியுசி), சொ.இரணியப்பன் (ஏஐசிசிடியு), ஆர்.
திருப்பதி (டியுசிசி), ஆர்.சம்பத் (டபிள்யு.பிடியுசி) ,இரா.அந்திரிதாஸ் (எம்எல்எப்), ஏ.எஸ்.குமார் ( எல்டியுசி) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை  வருமாறு:

2020 டிசம்பர் 8 ஆம் தேதியன்று “பாரத் பந்த்” மேற்கொள்ளுமாறு அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள வேண்டுகோளுக்கு, தமிழகத்தின் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு முழு ஆதரவை தெரிவிக்கிறது.           விடுதலைப் போராட்டத்திற்கு பின், மிகப்பெரிய மக்கள் கிளர்ச்சியை நமது வாழ்நாளில் நாடு பார்க்கிறது. ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் கூட, விவசாயிகளுடைய கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. அவர்களின் அடிப்படை கோரிக்கை பற்றி நன்கு அறிந்திருந்தும் கூட, அதில் தீர்வுகாண முயற்சிக்காமல் பேச்சுவார்த்தை நடத்துவது போல பாவனை காட்டி அவர்களை திருப்பி அனுப்புவதிலேயே மத்திய அரசுகுறியாக உள்ளது. இது பொருத்தமற்ற அணுகுமுறையாகும். மேலும் போராட்டத்தை இழிவுபடுத்தி பேசுவதும், போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள், கூலிப் பட்டாளம் என்று சித்தரிக்க முயற்சிப்பதும் கடும் கண்டனத்துக்குரியதாகும்.இந்திய மக்கள் அனைவரின் ஆதரவையும் இந்தப் போராட்டம்பெற்றிருப்பதை புலப்படுத்து வதற்காக, டிசம்பர் 8 ஆம் தேதி பந்த்நடத்த அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கு தமிழக தொழிலாளர்களின் முழு ஆதரவை தெரிவிப்பதோடு, பணியாளர் அமைப்புகள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட குடிமைச் சமூக அமைப்புகள் அனைத்தும்போராட்டத்தை ஆதரிக்குமாறு தொழிற்சங்கங்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம். போராட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு தமிழக தொழிலாளர்களையும் மக்களையும் கேட்டுக்கொள்கிறோம். டிசம்பர் 8 ஆம்தேதியன்று விவசாயிகள் நடத்தும்ஜனநாயக வழிப்பட்ட போராட்டங் களில் தொழிலாளர்கள் பங்கேற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

புதுவையிலும் முழு அடைப்பு 
விவசாயிகள் நடத்தும் தேசம் தழுவிய  பந்த் போராட்டத்திற்கு ஆதரவுதெரிவித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி முதலியார் பேட்டையில் ஏஐடியுசி அலுவலகத்தில் ஏஐடியுசி  மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு பிரதேச செயலாளர் சீனிவாசன் ,பொருளாளர் பிரபுராஜ்,ஏஐடியுசி மாநில செயல் தலைவர்  அபிஷேகம், தலைவர் தினேஷ்பொன்னையா, ஐஎன்டியூசி மாநில துணைத் தலைவர் சொக்கலிங்கம், ஏஐசிசிடியூ மாநில பொதுச்செயலாளர் புருஷோத்தமன், எல்எல்எஃப் மாநிலச்செயலாளர் செந்தில், எம்எல்எப் மாநில செயலாளர்  வேணுகோபால், அரசு ஊழியர் சம்மேளன தலைவர் பிரேமதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.டிசம்பர் 8 போராட்டத்தை புதுச்சேரியில் வெற்றிகரமாக நடத்த திங்கட்கிழமை பிரச்சாரம் செய்வது என்றும், டிசம்பர் 8 அன்று ஊர்வலமாக சென்றுமறியல் போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

;