சென்னை, பிப்.22- கரும்பு விவசாயிகள் சங் கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன் விடுத்துள்ள அறிக்கை: மாநில அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க பல அம் சங்கள் இடம் பெற்றுள்ள போதிலும் கரும்புக்கு கூடுதல் விலை அறிவிக்காதது கரும்பு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற் றத்தை அளிக்கிறது. 9.5 பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ. 5000 விலை வழங்கிட வேண்டுமென்ற கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு கடந்த ஐந்தாண்டு காலமாக அமல்படுத்தவில்லை.
வேளாண் விளை பொருட்களுக்கு சாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விலை வழங்கிட ஒன்றிய பாஜக அரசு மறுத்து, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது. மாநில அரசுகள் கரும்பு விவசாயிகளின் நலன்களை காத்திட கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவித்து வழங்கி வருகின்றன. பஞ்சாப் மாநில அரசு, ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஒரு டன் கரும்புக்கான விலையுடன் (FRP) மாநில அரசின் பரிந்துரை விலை (State Advised Price ரூ. 1000 கூடுதலாக சேர்த்து 2023-24 பருவ கரும்புக்கு ரூ. 3960-ஐ விவசாயிகளுக்கு தருகின்றனர்.
அரியானா மாநில அரசு பரிந்துரை விலை (SAP) ரூ.958 சேர்த்து 2023-24 இல் ஒரு டன் கரும்புக்கு ரூ.3874 விலை வழங்குகின்றனர். இந்த இரண்டு மாநிலங்க ளிலும் சராசரியாக 9.8 சதவீதம் தான் கரும்பு பிழிதிறன் வருகிறது. 2023-24 ஆம் ஆண்டுக்கு ஒன்றிய பாஜக அரசு 9.5 பிழிதிறன் கரும்பு ஒரு டன்னுக்கு ரூ. 2916 விலை அறிவித்துள்ளது. வேளாண் பட்ஜெட்டில் மாநில அரசு அறி வித்துள்ள ரூ.215 ஊக்கத்தொகையும் சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ. 3131 தான் விலை வழங்கப்படும்.
இதில் ரூ. 2916 சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயி களுக்கு விலையாக வழங்குவார்கள். டன்னுக்கு ரூ. 215 மாநில அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவார்கள். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சர்க்கரை ஆலைகள் அரசு அறிவித்திடும் விலையை வழங்குகின்றனர். மாநில அரசிடம் வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்துவிட்டு மாநில அரசு விலையாக பரிந்துரை விலை (SAP) வழங்கிட வேண்டுமென கேட்டோம்.
மாநில அரசு ஊக்கத்தொகையாக டன்னுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரூ. 195 உடன் ரூ. 20 உயர்த்தி ரூ. 215 ஆக வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவித் துள்ளனர். மாநில அரசு 2021-22இல் ரூ.192.50ம், 2022-23இல் ரூ.195-ம், 2023-24இல் ரூ. 215-ம் ஊக்கத்தொகையாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது கரும்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அலங்காநல்லூர் நேசனல் கூட்டுறவு சர்க்கரை ஆலை உட்பட மூடியுள்ள சர்க்கரை ஆலைகளை திறந்து செயல்படுத்திடவும், திருத்தணி கூட்டுறவு ஆலை உட்பட கூட்டு றவு ஆலைகளை மேம்படுத்திட பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் ரூ. 5800 கோடி கரும்பு பண பாக்கி உள்ளதை யும் சேர்த்து நாடு முழுவதும் ரூ. 8000 கோடி விவசாயிகளுக்கு கரும்பு பண பாக்கி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் கரும்பு பண பாக்கி இல்லை என்பது நல்ல அம்சமாகும். வேளாண் பட்ஜெட்டில் கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ. 20.43 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் கரும்பு உற்பத்தி செலவு உயர்ந் துள்ள நிலையில் கரும்புக்கான விலையை உயர்த்தி வழங்கிட வேண்டுமெனவும், கூட்டு றவு ஆலைகளை மேம்படுத்திட குறிப்பாக திருத்தணி கூட்டுறவு ஆலையை புதுப்பித்திட வேண்டும், மூடியுள்ள கூட்டுறவு ஆலை களை திறந்து செயல்படுத்த அரசு அறி விப்பை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.