மாதர் சங்க கிருஷ்ணகிரி மாநாட்டில் கியூபா நிதி வழங்கல்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 14வது மாவட்ட மாநாடு கவிமணி தேவி தலைமையில் நடைபெற்றது. ரம்யா கொடியேற்றினார். ஓசூர் மாநகர தலைவர் வள்ளி அஞ்சலி வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் டி.எம்.ராதா வேலை அறிக்கை வாசித்தார். மாநிலச் செயலாளர் ஜி.ராணி புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுரையாற்றினார். இந்த மாநாட்டில், கியூபா நிதி 1,855 ரூபாய் வழங்கப்பட்டது. செப்டம்பர் 24 முதல் 27ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் நடைபெற இருக்கும் மாதர் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாடு இலச்சினை வெளியிட்டனர்.