tamilnadu

விவசாயிகளுக்கான பயிர் கடன் வழங்கல்

கோவை, நவ.22- கூட்டுறவு துறை மூலம் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான பயிர் கடன் அளவுகளை நிர்ணயிப்பது தொடர் பாக மாவட்ட தொழில்நுட்பக் குழுவு டனான ஆலோசனைக் கூட்டம் சனி யன்று நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் சனியன்று நடை பெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் இந்துமதி, பொது மேலாளர் ஜெய்சங்கர், கூட்டு றவு சங்கங்களின் இணை பதிவாளர் கள பழனிச்சாமி (கோவை), பிரபு (திருப்பூர்), வேளாண்மை இணை இயக்குநர் சித்ராதேவி, தோட்டக் கலைத் துணை இயக்குநர் புவனேஸ் வரி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில், வேளாண்மைத் துறையின் மூலம் தமிழ்நாடு அரசு விவசாயிக ளுக்கு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. குறுகிய கால கடனில் பயிர் சாகுபடி கடன்கள், உழவர் கடன் அட்டை திட்டம், விவசாய நகைக்கடன்கள், மகசூல் விற்பனைக்கடன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கீழ் விவசாயி களுக்கு கோவை மாவட்டத்திலுள்ள மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடங்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. குறுகிய கால பயிர்களான நெல், கரும்பு, வாழை, சோளம், ராகி, உளுந்து, மிளகாய், எள், சூரியகாந்தி, பருத்தி, மஞ்சள், சோயா, வெங்காயம், காய்கறிகள், வெற்றிலை உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர்கடன்கள் வழங் கப்படுகிறது. தென்னை, மா போன்ற தோப்புகள் பராமரிக்கவும் பயிர்க் கடன்கள் வழங்கப்படுகிறது.

மேலும், விதை, உரம், பூச்சி மருந்து, களைக்கொல்லி, நுண்ணூட்ட சத்து போன்ற இடுபொருட்கள் வாங்க வும், நீர் மேலாண்மை, உழவு, களை எடுத்தல், எலி ஒழிப்பு, பூச்சி, பூஞ்சாண மருந்து தெளித்தல்,அறுவடை போன்ற வேலைகளுக்கு கூலி கொடுக் கவும் தேவைப்படும் தொகையை கடனாக வழங்கப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 2021-2022 ஆண்டிற்கான பயிர் கடன்கள் வழங்கப்படவுள்ளது. கூட்டு றவுத் துறையின் மூலம் வழங்கப்படும்  மாவட்ட தொழில்நுட்ப குழுவில் நிர்ணியிக்கப்பட்டதன் அடிப்படை யில், இப்பயிர்கடன்களை விவசாயிக ளுக்கு சிரமமின்றி உரிய காலத்தில் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் பயிர்கள் மற்றும் விளை விக்கும் நில அளவுகளுக்கு தகுந்தாற் போல் பயிர் கடன்களை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் விவசாயி கள் அதிக அளவில் விவசாயம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சி யர் கு.இராசாமணி தெரிவித்தார்.

;