tamilnadu

சிபிஎம் தலைவர்கள் இன்று பிரச்சாரம்

ஜி.ராமகிருஷ்ணன்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி அவர்களுக்கு ஆதரவாக 29-3-2019 அன்று மாலை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வேட்பாளருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.


கே.பாலகிருஷ்ணன்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் அவர்களை ஆதரித்து மண்ணடி தம்புச்செட்டித்தெருவில் 29-3-2019 அன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுகிறார். 


உ.வாசுகி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் சட்டமன்ற வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர்களை ஆதரித்து 29-3-2019 அன்று தஞ்சாவூர் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.