மருத்துவர் அண்ணாஜி அவர்களின் துணைவியார் நாகரத்தினம் அம்மாள் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நலம் விசாரித்தனர்.
சுதந்திர போராட்ட வீரர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தமிழகத்தில் விவசாய சங்கத்தை உருவாக்கிய ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான கிருஷ்ணகிரி மக்கள் மருத்துவமனையின் மருத்துவர் அண்ணாஜி அவர்களின் துணைவியார் நாகரத்தினம் அம்மாள் (93).
நாகரத்தினம் அம்மாள் தொடர்ந்து கட்சியின் அனுதாபியாகவும் தீக்கதிர் நாளிதழில் தொடர் வாசகர் ஆகவும் இந்நாள்வரை உள்ளார். அவரை அவரது பேரன் மருத்துவர் ஜெய் அண்ணாஜி பொறுப்புடன் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பி .செல்வசிங்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு,சிபிஎம் சேலம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா ஆகியோர் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.