திருவொற்றியூர் 4ஆவது வார்டில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தகவல்
சென்னை, அக். 22- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் மழை வெள்ள பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகள் நடைபெற்றதால் மழைநீர் எங்கும் தேங்காமல் வெளியேற்றப்படுகிறது. பக்கிங்காம் கால்வாய் கரையை ஒட்டி யுள்ள ஜோதி நகர், ஏவரெடி காலனி, வி.பி.நகர் அருகே செட்டர் வால்வு அமைக்கப்பட்டது. 100 எச்பி ஜென ரேட்டருடன் தண்ணீர் அகற்றும் மோட்டார்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் தண்ணீர் எங்கும் தேங்கி நிற்கவில்லை. மேலும் எவரெடி காலனி 10, 11, 12 தெருக்களில் தேங்கி இருந்த தண்ணீர் டிராக்டர் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது. மேட்டுத்தெருவில் 2 அடி உயர்த்தி சாலை அமைக்கப்பட்டதால் எப்போதும் தண்ணீர் நிற்கும் இத்தெருவில் தண்ணீர் நிற்காமல் செல்கிறது. எவரெடி காலனியில் வசிக்கும் மக்கள் பெரும்பான்மையோர் கட்டுமான தொழிலாளர்கள். கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வேலைக்கு யாரும் செல்ல இயல வில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு புதன்கிழமை (அக். 22) காலை, மதியம், இரவு மூன்று வேளையும் 1,500 பேருக்கு வீடு வீடாக சென்று உணவு வழங்கப்பட்டது. அதேபோல் முல்லை நகர் பகுதி மக்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர், மண்டலத் தலைவர், தி.மு.தனியரசு, வட்டார அலுவலர் வடக்கு மண்டல அலுவலர் பாண்டியன், உதவி வருவாய் அலுவலர் அர்ஜுன், செயற்பொறியாளர் பாபு, உதவி செயற்பொறியாளர் நமச்சிவாயம், உதவி பொறியாளர் திவ்யாஸ்ரீ, சுகா தார ஆய்வாளர் பிரதீஸ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர் வெங்கடையா, கிளைச்செயலாளர் தனலட்சுமி. நகர் நல சங்க தலைவர் பாஸ்கர், செயலாளர் செந்தில் ஆகியோர் இணைந்து பணியாற்றிய தற்கு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன் நன்றி தெரிவித்தார்.
திருவொற்றியூர் சீனிவாசபுரம் 2ஆவது குறுக்குத் தெருவில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
