tamilnadu

img

தமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று 

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு 5 ஆயிரத்து 589 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்து 708 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றால் 9 ஆயிரத்து 383 பேர் உயிரிழந்துள்ளனர். 69 லட்சத்து 66 ஆயிரத்து 657 தொற்றின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்று 78 ஆயிரத்து 614 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 577 பேருக்கும், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 12 பேர்கள் என 5,589 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 70 பேர் உயிரிழந்துள்ளனர்.