tamilnadu

img

தமிழகத்தில் இன்று 2,334 பேருக்கு கொரோனா தொற்று 

தமிழகத்தில் 2,334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 2,334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 7,43,822 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று ஒரே நாளில் பிசிஆர் மூலம் 75,384 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது . இதுவரை 1,05,61,722 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,410 ஆண்களும், 924 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று ஒரே நாளில் 2,386 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 7,13,584 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 பேராகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,344 பேராகும். தமிழகத்தில் 18,894 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.