சென்னையில் 210 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
டிசம்பர்16 வரை 6,344 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 210 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2361 பேருக்கு இன்னும் முடிவு வரவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.