வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

img

கொரோனா பாதித்த மாநகராட்சி பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம்

சென்னை:
கொரோனா தொற்று பாதித்த சென்னை மாநகராட்சிபணியாளர்களுக்கு கருணை தொகை வழங்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவிவழங்கப்படும்.  தொற்று பாதித்த 34 சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் கருணைதொகையாக வழங்கப்படும் . சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 82 வயதாகும் சமூக ஆர்வலர் வி.சந்தானம் தனது வீட்டிலேயே 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கை கழுவும் திரவம் ஆலையை நிறுவிஅதனை அவர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். அவருக்கு என் நன்றி கலந்த பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

;