புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வெகுமதி தொகை ரூ. 6ஆயிரம் வழங்க கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.கட்டுமானதொழிலாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையை ரூ. 6 லட்சம் என உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ளகட்டுமான நல வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கட்டுமானதொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி கவுரவத் தலைவர் கலியன் தலைமை தாங்கினார். சிஐடியுமாநில தலைவர் பிரபுராஜ்,முன்னாள் தலைவர்ராமசாமி, சங்கத்தின் செயல் தலைவர் சுரேந்திரன், பொதுச் செயலாளர் சேகர், பொருளாளர் ஜீவானந்தம், நிர்வாகிகள் ஜெயந்தி, ராமலிங்கம், ஐயப்பன், ராஜம் உள்ளிட்ட திரளான கட்டுமானதொழிலாளர்கள் பங்கேற்றனர்.
