தோழர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினம்
திருப்பூர், செப்.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி ஊத்துக்குளி, திருப்பூர், அவிநாசி ஆகிய பகுதிகள் வெள்ளி யன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி ஊத்துக்குளி பேருந்து நிறுத்த மைதானத்தில் நடைபெற் றது. ஊத்துக்குளி தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி தலைமை வகித்தார். இதில், 23 பேர் உடல் தானம் செய்வதற்கான விருப்ப படிவத்தை ஊத்துக்குளி தலைமை மருத்துவ அலுவலர் கார்த்திகேயனிடம் வழங்கினர். கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா குழு உறுப் பினர் கை.குழந்தைசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பாலமுரளி உள் ளிட்டோர் பேசினர். இதில் திரளானோர் தாலுகா குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருப்பூர்: அதேபோல் தோழர் சீத்தாராம் யெச்சூரி யின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி திருப்பூர் பிஆர் நிலையத்தில் சாலை யோர வியாபாரிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் பி.பாலன் தலைமை யில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சாலை யோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில கன்வீ னர் பி.கருப்பையன், சிஐடியு மாநில துணைத் தலைவர் தெய்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் சாலையோர வியா பாரிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முரு கேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். அவிநாசி: தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட அவிநாசி வடக்கு, அவிநாசி மாதர், செங்காடு, நடுவச்சேரி, வடு கபாளையம், காட்டுவளவு, ஆட்டையம்பா ளையம், கருணைபாளையம், பெரியாயிபா ளையம், அம்மாபாளையம், பச்சாம்பாளை யம், பாரதி நகர், தேவராயன்பாளையம், கரு வலூர் அவிநாசிலிங்கம்பாளையம் கவுண் டம்பாளையம் உள்ளிட்ட கிளைகளின் சார் பில் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒன் றியச் செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, மாவட் டக் குழு உறுப்பினர் ஆர். பழனிச்சாமி ஒன் றியக்குழு உறுப்பினர்கள் கிளைச் செயலா ளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். பல்லடம்: அதேபோல் பல்லடம் கட்சி அலுவல கத்தில் ஒன்றியச் செயலாளர் வை.பழனி சாமி தலைமையில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஆர்.பரசிவம், பிரவீன் குமார் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செய லாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதேபோல் உடுமலையிலும் உடல் தானம் மற்றும் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.