tamilnadu

img

தோழர் பழனி காலமானார்

சென்னை, ஜூன் 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த உறுப்பினர் தோழர் பழனி வெள்ளியன்று (ஜூன் 7) காலமானார். அவருக்கு வயது 90. பெரம்பூர் வியாசர்பாடி பகுதியில் இடதுசாரி கொள்கைகளை பரப்பி மக்களை ஒன்றிணைத்தவர். மக்கள் கோரிக்கைக்காக மார்க்சிஸ்ட்கட்சி நடத்திய நிகழ்வுகளில் தவறாது பங்கேற்றவர் தோழர் பழனி.  பெரம்பூர் வியாசர்பாடி கட்டபொம்மன் தெருவில் உள்ள  இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு  உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், பகுதிச்செயலாளர் ஏ.விஜயகுமார் மற்றும் எஸ்.ராணி உள்ளிட்டோர் அஞ்சலி  செலுத்தினர். பெரம்பூர் பிபி சாலையில்  உள்ள மயானத்தில்  உடல் அடக்கம் செய்யப்பட்டது.