தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 11-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மொத்தம் தேர்வு எழுதிய 7,76,844 மாணவர்களில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 84.97 சதவிகிதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.20 சதவிகிதம், தனியார் பள்ளிகள் 97.69 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாணவர்கள் 86.99 சதவிகிதமும், மாணவிகள் 94.36 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் (96.38%) முதல் இடமும், ஈரோடு மாவட்டம் (96.18%) இரண்டாம் இடமும், கோவை (95.73%) மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.