tamilnadu

பட்டாசு ஆலை வெடி விபத்து

சாத்தூர், ஜூன் 29-  சாத்தூர் அருகே அச்சங்குளத் தைச் சேர்ந்த சகாதேவன் (41)என்ப வருக்கு சொந்தமான ‘குரு ஸ்டார்’ பட்டாசு ஆலை பந்துவார்பட்டி கிரா மத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையானது, மாவட்ட வரு வாய் அலுவலரின் உரிமம் பெற்று இயக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள 10-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

வழக்கம்போல் சனிக்கிழமை யன்றும் காலையில் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். அப்போது, பட்டாசு தயாரிக்கத் தேவையான வேதிப் பொருட்களை கலக்கும் அறையில் திடீ ரென ஏற்பட்ட உராய்வின் காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் 3 அறைகள் தரைமட்டமா கின. மேலும், அங்கு பணியில் இருந்த  நடுச் சூரங்குடியை சேர்ந்த கடற்கரை  மகன் மாரிச்சாமி (40), அச்சங்குளத் தைச் சேர்ந்த மதியழகன் மகன் இராஜ் குமார் (45), சத்திரபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மோகன் (30), அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் செல்வக்குமார்(35) ஆகிய 4  பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவல் அறிந்து வெம்பக்கோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை பகுதியில் இருந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்தனர்.

சாத்தூர் வட்டாட்சியர் லோக நாதன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு  செய்தார்.  மேலும், 4  பேரின் உடல்கள்  கூராய்வுக்காக சாத்தூர் அரசு மருத்து வமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆலை உரிமை யாளரான அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த சகாதேவன் மகன் குருசாமி, பாண்டியன் ஆகியோரைத் தேடி  வருகின்றனர்.

சிஐடியு தலைவர்கள் ஆறுதல்

இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்  பத்தினரை சிஐடியு - பட்டாசு தீப்பெட்டி  தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் எம்.சி. பாண்டி யன், மாவட்ட நிர்வாகிகள் கே. விஜய குமார், எஸ். மனோஜ்குமார், ஏ. சீனி வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் எஸ். சரோஜா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 

முதல்வர் நிவாரணம்

விபத்தில் பலியானோர் குடும் பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா  ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.