சென்னை, ஏப்.24- மூத்த பத்திரிகையாளர்- திராவிட இயக்கச் சிந்தனையாளர் சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் இணையதளங்களில் ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரை வெளியான கட்டுரைகளில் அரசியல், சமூகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கு சின்னகுத்தூசி நினைவு விருதும், தலா ரூ.10,000 பரிசும், மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசியின் பிறந்தநாளான 15-6-2019 அன்று நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை, அறை எண்.6, 13, வல்லப அக்ரஹாரம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005. என்ற முகவரிக்கும், chinnakuthoositrust@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். கட்டுரைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் 10-05-2019. கட்டுரை ஆசிரியர்கள் மட்டுமின்றி, கட்டுரையைப் படித்த வாசகர்களும் தாங்கள் விரும்பும் கட்டுரைகளைப் பரிந்துரைக்கலாம்.