tamilnadu

img

பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பான செயல்பாடு

சென்னை, மார்ச் 8 - பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளியன்று (மார்ச் 8) நடைபெற்ற நிகழ்ச்சி யில், ரூ. 518 கோடி மதிப்பிலான திட்டப்பணி களைத் துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், கனவு இல்லத் திட்டப் பயனாளி களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பு களுக்கான அரசாணையும், மூத்த செய்தியாளர் மதுரை சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருதை வழங்கினார்.

மாநில அளவிலான சிறந்த பட்டு விவசாயி கள், சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளர்கள் மற்றும் தானியங்கி பட்டு நூற்பாளர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கினார்.  இலங்கை, பர்மா மற்றும் வியட்நாம்  நாடுகளில் இருந்து தாயகம் திரும்பியோர் களுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்காக அட மானம் பெறப்பட்ட கடவுச்சீட்டு மற்றும்  பயண ஆவணங்களையும் பயனாளி களுக்கு முதல்வர் வழங்கினார்.

மேலும், ஜெ. ஜெயலலிதா கவின் கலைப்  பல்கலைக் கழகத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

3 ஆட்சியர்களுக்கு விருது
பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயலாற்றிய இராமநாதபுரம், காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் துறை சார்பில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங் களை மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கி னார்.

திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங் களில் ரூ. 499 கோடியே 69 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நான்கு வழித்தட சாலை பணிகள், திருத்தணி வட்டம் நாகலாபுரம் சாலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ. 18 கோடியே 57 லட்சம் செல வில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம்  ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டி ற்காக திறந்து வைத்தார்.  

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 219 நபர்களுக்கு பணி  நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ. வேலு, மு.பெ. சாமிநாதன், கீதா ஜீவன் மற்றும் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.