tamilnadu

img

செட்டிநாடு உணவுத்திருவிழா

சென்னை,மே 24சென்னை அண்ணாசாலையிலுள்ள பிரபல ஹோட்டலான ரெயின்ட்ரீ, தி பங்களா, காரைக்குடியுடன் இணைந்து நடத்தும் 10 நாள் உணவுத்திருவிழாவை நடத்துகிறது. அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற, தனித்தன்மை வாய்ந்த, அசல் காரைக்குடி பாணியிலான உணவு வகைகளை பங்களா காரைக்குடி உணவகத்தின் சமையல் நிபுணர்களான பாண்டி, காசி ஆகியோர் சமைத்து வழங்கவுள்ளனர். கடாய் மிளகு மசாலா, வாழைப்பூ மீன் குழம்பு, மிளகு கோழி வறுவல், உப்பு கறி, நண்டு மிளகு மசாலா, காரைக்குடி இறால் வறுவல், மட்டன் சாப்ஸ், மூளை மசாலா, சுறா புட்டு, வெள்ளை பணியாரம், உருண்டை குழம்பு, வாழைப்பூ குழம்பு, முளைக்கீரை வடை, கறிவேப்பிலை குழம்பு, கவுனி அரிசி அல்வா மற்றும் இன்னும் பல சுவையான உணவுவகைகளை உண்டு மகிழுங்கள். இந்த 10 நாள் செட்டிநாடு உணவுத் திருவிழா ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண் : +91 44 43 93 99 99.