tamilnadu

சென்னை துறைமுகம் - மதுரவாயல் எக்ஸ்பிரஸ்வே திட்டம் தற்காலிக நிறுத்தம்

சென்னை, மே 31- சென்னை துறைமுகம்-மதுர வாயல் பறக்கும் சாலை திட்டம் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயலுக்கு புதிதாக உயர்மட்ட சாலை அமைக்க கடந்த  திமுக ஆட்சியில் முடிவு செய்யப் பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில்  இந்த திட்டம் கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இருப்பதாக கூறி இந்த திட்டத்திற்கு  கடந்த ஆட்சியில் தடை விதிக்கப் பட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்ட இந்த திட்டமானது பல்வேறு பிரச்சனையால் முடங்கியது. தற்போது மீண்டும் திமுக ஆட்சி  வந்தவுடன் சென்னை துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், இரண்டு அடுக்கு மேம்பால மாக மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த  மேம்பாலமானது சுமார் 5  ஆயிரத்து 855 கோடி ரூபாய்  செலவில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் அனைத்தும் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த இரண்டடுக்கு மேம்பால திட்டத்திற்கு துறைமுகம் மதுர வாயல் வழித்தடத்தில் ஏற்கனவே கூவம் ஆற்றங்கரையில் அமைக் கப்பட்ட தூண்கள் இடித்து அகற்றப்பட்டது. தற்போது புதிதாக கட்டப்படும் இந்த சென்னை துறைமுகம் மதுரவாயல் இரண்டு அடுக்கு மேம்பாலம் திட்டத்தில் மொத்தம் 65 தூண்கள் மற்றும் 13 சரிவு பாதைகள் வர இருக்கிறது.

மேம்பால பணிக்கு தூண்கள் அமைக்கும் ஆரம்ப கட்ட பணி களை ஒப்பந்ததாரர்கள் சார்பில் தொடங்கப்பட்டது. இந்த பணிகள்  அனைத்தும் துரிதமாக நடைபெற்று  வருகிறது. மேலும் மதுரவாயலில்  சாலை நடுவே உள்ள மின்கம்பங் கள் மற்றும் தடுப்புகளை அகற்றும்  பணிகள் ஏற்கனவே தொடங்கி நடந்து முடிந்துள்ளது. இந்த இரண்டு அடுக்கு மேம்பாலத்தில் முதல் அடுக்கில் பேருந்துகள் இருசக்கர வாகனங் கள் மற்றும் நான்கு சக்கர வாகனங் கள் அனைத்தும் செல்லும்.

அதே போல் இரண்டாவது அடுக்கில் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை இயக்கப்படும் கனரக சரக்கு வாகனங்கள் செல்லும் வகையில் நான்கு வழிச் சாலையாக அமைக்கப்பட இருக் கிறது. இந்நிலையில் கூவம் ஆற்றில்  இந்த பணிகள் அனைத்தும் தற் காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு நீர்வளத்துறை தேசிய நெடுஞ்சாலைத் துறை மீது அளித்துள்ள புகார் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த திட்டம் மேலும் தாமதமாகும் எனக் கூறப்படுகிறது.

;