சென்னை,ஜன.17- பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் இருந்து மக்கள் புறப்பட்டு சென்ற னர். பேருந்து, ரயில்கள், கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றதால் 3 நாட்களாக சென்னை நகரமே வெறிச் சோடிக் காணப்பட்டது.
சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வெளியூர் பயணம் மேற் கொண்டு இருக்கலாம் என்று கருதப்படு கிறது. சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டும் 3 நாட்களில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பண்டிகை முடிந்து மீண்டும் சென்னைக்கு திரும்ப பயணத்தை தொடங்கி விட்டனர். அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் ரயில் களில் பல லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
எனவே, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், ஓசூர், பெங்களூர், கோவை, சேலம் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. வழக்கமாக இயக்கக் கூடிய 2100 பேருந்துகளுடன் 2000 சிறப்பு பேருந்து கள் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. அதே போல 1800 ஆம்னி பேருந்துகள் என மொத்தம் 6 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு பேருந்துகளில் ஒரு லட்சத் திற்கும் மேலானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
மேலும் ஆம்னி பேருந் துகளில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. வந்தே பாரத், துரந்தோ உள்ளிட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இருக்கைகள் நிரம்பியதால் மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. கோவை, பெங்களூர், மற்றும் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து வரும் ரயில்களிலும் இடம் இல்லாததால் மக்கள் முன்பதிவு இல்லாத பெட்டி களில் பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வெளியூர்களி் ருந்து சென்னைக்கு வரும் பேருந்து கள், கார்கள் போன்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கூடுதலாக காவலர்கள் நிய மிக்கப்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு செய்கின்றனர். கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையப் பகுதி, பெருங்களத்தூர், மதுர வாயல், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் நெரிசல் ஏற்படு வதை தவிர்க்க முன்னேற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. 5 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு வியாழனன்று அனைத்து அரசு அலு வல் பணிகளும் தொடங்குவ தால் விடு முறையில் சென்றவர்கள் பயணம் செய்தனர்.