திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

img

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்று லேசான மழையும் பெய்யக்கூடும். 

மேலும், 30ஆம் தேதி அன்று கடலோர மாவட்டங்களில், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும், 31 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

;