tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு  
சென்னை,ஜன.29- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- ]

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜன. 30 மற்றும்  31 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை  நிலவக்கூடும் என்றும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில்  லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள் ளது. ஜன.31 முதல் பிப்.2 வரை தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

மற்றப் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்.3 மற்றும்  4 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை  நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்புள் ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

தொடர் மருத்துவக் கண்காணிப்பில் சாந்தன்
சென்னை,ஜன.29- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று,  வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்ச நீதி மன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக் கப்பட்டார்.

அதன் பின்னர், அவர் திருச்சியில்  உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப் பட்டிருந்தார்.

இலங்கை தமிழரான சாந்தனுக்கு ஜன.24-ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டது தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

கல்லீரல் செயலி ழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்த னுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப் பதாகவும், அதே நேரத்தில் பிற பாதிப்பு களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

12வது உலக தமிழ் மாநாடு: சென்னையில் நடத்த திட்டம்
சென்னை,ஜன.29- சென்னையில் அடுத்தாண்டு மே மாதம், 12வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்பட உள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்  சார்பில், அடுத்தாண்டு மே மாதம்,  சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 12வது உலக தமிழ் ஆராய்ச்சி மூன்று நாள் மாநாடு நடக்க உள்ளது.

சென்னையில் நடந்த ஆலோசனை  கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப் பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர், பல்வேறு தலைப்புகளில் ஆய்வு கட்டு ரைகளை எழுதலாம். இந்த மாநாட்டிற்கு, பிறமொழி களை சேர்ந்த தமிழ் ஆராய்ச்சியாளர் களும் அழைக்கப்பட உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் உரையாடும் வகையில் சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் பாரம்பரிய உணவு,  மருத்துவம், கலை, நெசவு உள்ளிட் டவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. எழுத்தாளர்கள் நூல்களை அறிமுகம் செய்ய அரங்கும் ஒதுக்கப்பட உள்ளது.

தங்கம் விலை  மீண்டும் உயர்வு
சென்னை,ஜன.29- சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையானது. இந்நிலையில், திங்களன்று (ஜன.29) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,760-க்கும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,845-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70-க்கும் பார் வெள்ளி ரூ.77,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆளுநருக்கு ரவிக்கு
‘மீடியா மேனியா’
அமைச்சர் ரகுபதி சாடல்!

 

சென்னை, ஜன. 29 - “ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. தினந்தோறும் தன் னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் உள்ள கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக மீடியாக்களில் வரு கிறது என்ற மறைமுகப் போட்டியே இருப்பது போலத் தெரிகிறது. 

மாநில அரசின் மீது விமர்ச னம் செய்து அதன்மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்ற னர்.  

மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பா.ஜ.க கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த  ாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.