வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

img

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை:
தமிழகத்தின் கடலோரத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் எனக் குறிப் பிட்டுள்ளது.பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள் ளது. அடுத்த இரு நாட்களில் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

;