tamilnadu

img

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளதுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டம் தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது இன்று மாலை வரை அதே பகுதியில் நிலவக்கூடும். இது மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக ராமநாதபுரம் வழியாக மேற்கு தென்மேற்கு திசை நோக்கி மெதுவாக நகர்ந்து நாளை மாலை தெற்கு கேரளப் பகுதியை அடையக்கூடும்.

இதனால், அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும். கடலூர், நாகை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.
தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மன்னார் வளைகுடா, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதனால் மீனவர்கள் நாளை காலை வரை இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம். என்று அவர் தெரிவித்தார்.