தமாகா-வுக்கு சைக்கிள் கிடைக்குமா?
சென்னை, பிப். 23 - கையை விட்டுப் போன சைக்கிள் சின்னத்தை மீண்டும் த.மா.கா.விற்கே ஒதுக்க வேண்டும் என்று அதன் தலை வர் ஜி.கே. வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தி ருந்தார். இந்நிலையில், “த.மா.கா-விற்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாகவே முடிவு செய்யப்படும். முதலில் வருபவர்களு க்கு முன்னுரிமை அடிப்படையில் த.மா.கா. மனு பரிசீலிக்கப்படும் என நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி யளித்துள்ளது.
இரண்டு பக்கமும் தேமுதிக துண்டு?
சென்னை, பிப். 23 - தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அதிமுக மூத்த நிர்வாகிகள் புதன்கிழமை சந்தி த்துப் பேசியதாகவும் தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. அதேநேரத்தில் 5 நாடாளு ன்றத் தொகுதிகளோடு ஒரு மாநிலங்க ளவை உறுப்பினர் வழங்க ஒப்புக் கொண்டால் தேமுதிக, பாஜக கூட்டணி க்கு தாவுவதற்கும் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடு கிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஏ.வி. ராஜூ நோட்டீஸ்
சென்னை, பிப். 23 - தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜூ, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி யுள்ளார். இந்த ஏ.வி. ராஜூவுக்குத்தான், கூவத்தூர் விவகாரத்தில் அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகை திரிஷா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.பெ.சாமிநாதன்
தந்தை மறைவு:
முதல்வர் இரங்கல்
சென்னை,பிப்.23- தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களது தந்தை முத்தூர் சா.பெரு மாள் சாமி மறைவுக்கு தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:- தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர். சா.பெருமாள்சாமி மறைந்த செய்தி யறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதனைத் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
அப்போது, 94 ஆண்டு களைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது இறுதி மூச்சுவரை உழவராக வாழ்ந்ததைக் குறிப்பிட்டார். பெருமாள்சாமி அவர்களது குடும்பத்தி னருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடங்கியது
சென்னை,பிப்.23- தமிழ்நாட்டின் மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான பொதுத்தேர்வு 10ம் வகுப்புக்கு மார்ச் 26 அன்று துவங்கி ஏப்ரல் 8 வரையிலும் நடை பெற உள்ளது. இந்நிலையில், செய்முறைத் தேர்வுகள் பிப்.23 அன்று துவங்கின.
பிப்ரவரி 29 வரை காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், பிறகு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இரு வேளைகளில் செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. செய்முறைத் தேர்வில் மொத்த மதிப்பெண் 25 ஆகும்.