அரசு நிறுவனத்தில் தனியார் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க வேண்டும் முதலமைச்சரிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை
சென்னை, அக். 17- அரசு கேபிள் டிவி எனும் அரசு நிறுவனத்தில் தனியார் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க வேண்டும் என்று தமிழக கேபிள் டிவி ஆப ரேட்டர்கள் பொது நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வியாழ னன்று (அக்.16) தலைமை செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமை யில் நாகை மாலி எம்எல்ஏ, சங்கத்தின் நிறுவனத் தலை வர் பி.சகிலன், தலைவர் சுப. வெள்ளைச்சாமி, செயலா ளர் எஸ்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் பி.ஆர். தணிகைவேல் உள்ளிட் டோர் சந்தித்து மனு அளித்து பேசினர். அதில், “அதிமுக ஆட்சி யில், அரசு கேபிள்களுக்கு 72 லட்சம் செட்டாப் பாக்ஸ் களை பெற மந்திரா நிறு வனத்தை தேர்வு செய்தனர். அதன்படி 34 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை அரசு கொள்முதல் செய்தது. இதில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. மக்கள் வரிப் பணத்தை வீணடித்து முறை கேடு செய்திருப்பதை சுட்டிக்காட்டி போராட் டங்களை நடத்தினோம். அரசு கேபிள் டிவி நிறு வனத்தையே முடக்க சதி செய்த மந்த்ரா நிறுவனம், கடந்த 6 மாதங்களாக ‘சூப்பர் டிஸ்டிரிபியூட்டர்’ என்ற பெயரில், கேபிள் டிவி வாரியத் தலைவர் ஜீவா உள்ளிட்டோருடன் சேர்ந்து பல கோடி ரூபாய் முறை கேடு செய்துள்ளது. மாவட்ட அளவில் விநியோகஸ்தர் கள் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளது. அரசு நிறு வனத்தில் தனியார் ஆதிக்கம் செலுத்துவது அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்து கிறது. இத்தகைய முறை கேடுகளை தடுக்க முதல மைச்சர் நேரடியாக தலை யிட வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணனின் பினாமியாக கேபிள் டி.வி.வாரிய தலை வர் ஜீவா உள்ளார். ஒன்றிய அரசின் பின்புலத்தில், கேபிள் டிவி ஆபரேட்டர் களின் வாழ்வாதாரத்தை கபளீகரம் செய்யும் ஜிடிபிஎல் நிறுவனத்தின் முதன்மை விநியோ கஸ்தராகவும் ஜீவா உள்ளார். எனவே, அவரை வாரியத் தலைவர் பதவியிலி ருந்து நீக்கம் செய்ய வேண்டும். அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் தேர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆபரேட்டர்கள் மற்றும் அரசு கேபிள் நிறுவனம் இணைந்த ஒரு கூட்டுறவு முறை தொடர்பாக புதிய விதியை உருவாக்க வேண்டும். ஒன்றிய அரசின் பின்புலத்துடன் செயல்படும் ஜிடிபிஎல் நிறுவனத்தை தமிழகத்திலிருந்து வெளி யேற்ற வேண்டும். கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான நலவாரியத்தை முறைப் படுத்த வேண்டும். வாரி யத்தில் ஆபரேட்டர்கள் சங்கத்திற்கு பிரதிநிதித் துவம் அளிக்க வேண்டும். சங்கம் அளித்துள்ள ஆக்கப் பூர்வமான ஆலோசனை களை செயல்படுத்த வேண்டும். குஜராத்திலிருந்து இயங்கும் ஜிடிபிஎல், பாண்டிச்சேரி ஏஜெகே, மின்னல் நிறுவனங்கள் வாடி க்கையாளர்களுக்கு ஒளி பரப்பு கொடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்து வதை தடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளனர். வெள்ளி விழா மாநாட்டிற்கு அழைப்பு மேலும், கேபிள் டிவி ஆப ரேட்டர்கள் பொதுநலச் சங்கம் 18 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய மாநாட்டில் கலைஞர் கலந்து கொண்டார். அதனை சுட்டிக் காட்டி, சங்கத்தின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்க அழைப்பு விடுத்த னர்.
