சென்னை, ஜூன் 1- அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக பேடிஎம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறி முகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரி வித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு நீங்கலாக பிற மாவட்டங்க ளில் 50 விழுக்காடு பேருந்துகளுடன் போக்கு வரத்து சேவை தொடங்கியுள்ளது” என்றார். பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்ட ணத்தை வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையை பயன்படுத்தலாம். சோதனை முயற்சி யாக பேடிஎம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். கன்னியாகுமரியில் ஜூன் 2 முதல் பேருந்து களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.