tamilnadu

img

பகத்சிங் பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம்

பகத்சிங் பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம்

கள்ளக்குறிச்சி, செப்.27- உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வாலிபர் சங்க 18 வது மாநில மாநாடு மற்றும் மாவீரன் பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் சனிக்கிழமை (செப்.28) நடைபெற்றது.  சங்க நகரத் தலைவர் ஏ.ரிச்சட்பாபு தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ஜோ.நிர்மல்ராஜ் வர வேற்றார். உளுந்தூர் பேட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிக்கண்ணன் முகாமை துவங்கி வைத்தார்.  நகராட்சி ஆணையர் புஸ்ரா, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மா.அன்புமணி, ரோட்டரி சங்கத் தலை வர் ஏ.ரவி, கணிதம் காப்போம் அறக்கட்டளை விஜஜ் செல்வா, வாலிபர் சங்க மாநில இணைச் செய லாளர் எம்.கே.பழனி, மாண வர் சங்க மாவட்டத் தலை வர் ஜே.டார்லிங், மாவட்டச் செயலாளர் ஏ.பிரகாஷ் காரத், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் இ.சதீஷ்  குமார், மாவட்டச் செய லாளர் மு.சிவகுமார், மாவட்டத் துணைச் செய லாளர் ஏ.கஸ்தூரி, மாவட்டத் துணைத் தலை வர் கே.சக்கரவர்த்தி, நகர செயலாளர் எம். தீபன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவ மனை ரத்த மைய்ய மருத்துவ அலுவலர் மருத்து வர் சதா வெங்கடேஷ், ரத்த வங்கி ஆய்வக நிபுணர்கள் தமிழ்ச்செல்வி, சரவணன், ஆலோசகர் ராஜன், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.