சென்னை, மார்ச் 24 - பாஜகவில் மத்திய சென்னை வேட்பாளராக வினோஜ் பி. செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்க னவே சட்டமன்ற தேர்தலில் துறை முகம் தொகுதியில் அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிராக நின்று படுதோல்வி அடைந்தார். மீண்டும் பாஜக மேலிடம், அவரை மத்திய சென்னை மக்கள வைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக் கிழமை இரவு வினோத் பி. செல்வம், சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கேஎல்பி அடுக்குமாடி குடி யிருப்புக்கு வந்தார். அங்கு வசிக்கும் வடமாநிலத்தவர்களுடன் வினோஜ் பி. செல்வம் பேச அடுக்குமாடி குடி யிருப்பு நலச் சங்க செயலாளர் ஏற் பாடு செய்திருந்தார்.
இங்கு வசிக்கும் அனைவரும் சென்னை சவு கார்பேட்டையில் சொந்தமாக தொழில் செய்து வருகின்றனர். புதிதாக அடுக்கு மாடி குடியிருப்புகளை வாங்கி புளி யந்தோப்பு பகுதிக்கு வந்துவிட்ட போதி லும் பெரும்பாலானோரின் ஓட்டு மத்திய சென்னை தொகுதியான துறை முகத்திலேயே உள்ளது.
இதனால் அவர்களை நேரில் சந்தித்து ஆத ரவை பெறுவதற்காக வினோஜ் பி. செல்வம் சென்றார். அந்த மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில்தான் குறைவாக ஓட்டுப் பதிவு சதவீதம் உள்ளது. 14 லட்சம் ஓட்டுகள் இருந்தும் வாக்காளர்கள் முறையாக ஓட்டுச் சாவடிகளுக்கு சென்று ஓட்டு போடுவதில்லை. குறிப் பாக, தேர்தல் என்றால் உங்களை போன்றவர்கள் (வடமாநில நபர்கள்) வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாள் லீவு என நினைத்து ‘வெக்கேஷன்’ கிளம்பி விடுகிறீர்கள்.
ஆனால், இங் குள்ள நபர்கள் (தமிழர்கள்) 500 ரூபாய் வாங்கிக் கொண்டு நேராக ஓட்டுச் சாவடிக்குச் சென்று சரியாக ஓட்டு போடுகின்றனர். இதனால்தான் தொடர்ந்து ஒரு சிலர் வெற்றி பெற்று வருகின்றனர். அது இனி நடக்கக் கூடாது. இங் குள்ள ஒவ்வொருவரும் (வட மாநில நபர்கள்) ஓட்டு சாவடிக்கு செல்ல வேண்டும். ஓட்டு சாவடிக்கு சென்று விட்டால் கண்டிப்பாக பாஜகவுக்குத் தான் ஓட்டு போடுவார்கள்.
எனவே, ஒவ்வொருவரும் தேர்தலுக்கு முந்தை யநாள் செல்போனில் குறைந்தபட்சம் 20 பேருக்காவது போன் செய்து ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டு போடுங் கள் என கூறவேண்டும். இதன் மூலம் நாம் எளிதில் வென்றுவிடலாம். இதனை அனைவரும் செய்யவேண் டும்.
மோடிஜி ஒரே மாதத்தில் 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். அதை நீங்கள் மறந்து விடக்கூடாது” என பேசியுள்ளார். இரவு 9 மணிக்கு தொடங்கி 10 மணியையும் தாண்டி இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்நிலையில் வினோஜ் பி. செல்வம் பேசிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வட மாநில நபர்களிடம் தமிழர்களை பற்றி தரக்குறைவாக பேசியதற்காக கடு மையான கண்டனத்திற்கும், எதிர்ப் புக்கும் உள்ளாகி வருகிறார்.