சென்னை, ஆக.3- கடற்கரை- வேளச்சேரி இடையே ஞாயிறன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை யில், சென்னை கடற்கரையில் இருந்து ஞாயிறன்று (ஆக.4) காலை 8, 8.20, 8.40, 9, 9.20, 9.40, 9.50, 10, 10.20, 10.40, 11, 11.20, 11.40, 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40 ஆகிய மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு பிற்பகல் 2 மணி முதல் ரயில்கள் இயக்கப்படும். அதே போன்று வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50, 1.10, 1.30 மற்றும் 1.50 வரை ரத்து செய்யப்படுகிறது. வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 2.10 மணி முதல் ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.