அழகாபுரி நடுநிலைப் பள்ளி மேற்கூரை சேதம் மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் அவதி
ஒட்டன்சத்திரம், அக்.22- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழ காபுரியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை சேத மடைந்து, மழைநீர் புகுந்த தால் மாணவர்கள் கடும் அவ திக்குள்ளாகியுள்ளனர். அந்தப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 70 மாணவர்களும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 36 மாணவர்களும் கல்வி கற் கின்றனர். கடந்த சில நாட்க ளாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், பள்ளி வகுப்பறைகள் மற்றும் சமை யலறையின் மேற்கூரை வழி யாக மழைநீர் கசிய, அறை களுக்குள் தேங்கியுள்ளது. பள்ளியின் சமையல் அறை மற்றும் வகுப்பறை கள் 2024 ஆம் ஆண்டில் மட் டுமே பழுது பார்க்கப்பட்டி ருந்தாலும், தற்போது மீண் டும் மேற்கூரை சேதமடைந் துள்ளது. இதனால் மாண வர்கள் வகுப்பறைகளுக் குள் அமர்ந்து பாடம் கற்ப தற்கு அஞ்சும் நிலை ஏற்பட் டுள்ளது. இந்நிலையில், தீபாவளி விடுமுறைக்கு பிந்தைய நாளில், முதல்வர் காலை உணவுத் திட்டத்திற்காக சமையல் செய்ய வந்த பணி யாளர்கள் சமையலறையில் தண்ணீர் தேங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த னர். மழைநீரில் உணவு பொருட்கள் நனைந்ததால், காலை உணவுத் திட்டம் பாதிக்கப்பட்டது. பள்ளி வளாகத்துக்கு வந்த பெற்றோர்கள், ஆசிரி யர்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள், “இவ்வாறு சேதம டைந்த கட்டிடங்களில் குழந் தைகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்துவது ஆபத்தானது. உடனடியாக கட்டிடங்களை பழுது பார்த்து பாதுகாப்பாக மாற்ற வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பிரதிநிதிகள் வேடசந்தூர் கல்வித்துறை அதிகாரியி டம் தகவல் தெரிவித்திருந்தா லும், இதுவரை எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படா தது பெற்றோர்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது.
