அரிதான நோய்கள் தினத்தை முன்னிட்டு அரிதான மரபணு நோய்களுக்கான ஆதரவு சங்கம், வி.ஹெச்.எஸ் உடன் இணைந்து அரிதான மரபணு குறைபாடு நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் நடிகர் கார்த்திக் சிவகுமார், சென்னை, மெடிஸ்கேன், மேலாண்மை மற்றும் மருத்துவ இயக்குனர் டாக்டர். சுரேஷ், இந்த குழந்தைகளுக்காக போராடும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ் மற்றும் எல்.எஸ்.டி.எஸ். அமைப்பின் மாநில ஒருங்கமைப்பாளர் ஆ.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மரபணு குறைபாடு நோய்களின் பல்வேறு அம்சங்கள், குடும்பங்கள் மீதான அதன் தாக்கம், நீண்ட-நாள் மேலாண்மை மற்றும் சவால்கள் உட்பட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இவர்கள் பேசினர்.