tamilnadu

கிண்டி சிறுவர் பூங்காவில் புதிய அனிமேஷன் ஷோ

சென்னை,டிச.25- சென்னை மாநகராட்சி யில் கிண்டி தேசிய சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. நாட்டிலேயே 8வது சிறிய தேசிய பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேசிய பூங்கா  உலர்- வறண்ட பசுமை காடுகள் மற்றும் புதற்காடுகள் தாவரங்க ளைக் கொண்டது. இங்கு பரந்த நிலப்பரப்பில் 350க்கும் மேற்பட்ட தாவர சிற்றின வகைகள்  காணப்படு கின்றன. 14 பாலூட்டி சிற்றி னங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இருக்கின்றன. இதில் புள்ளி மான், கலைமான், நரி, கீரி போன்ற விலங்குகள்  அதி கம் உள்ளன. மேலும், பல்வேறு வகையான தவளைகள், ஊர்வன சிற்றி னங்களும் இங்கு காணப்படு வது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, வன விலங்குகளுடன் நாம் திரையில் தோன்றும் வகை யில் ‘ரியாலிட்டி ஷோ’ நடத்த ப்படுகிறது. ‘3டி அனி மேஷன்’ பரிமாணத் தோற்ற த்தில் விலங்குகளுடன் நம்மை காட்சிப்படுத்து கிறார்கள். அரங்குக்குள் நாம் சென்றதும் நம்மை நோக்கி கேமரா படம் பிடித்து வன விலங்குகளுடன் நாம் இருப்பது போல் திரையில் ஒளிபரப்புகிறார்கள். நாம் கை அசைப்பது, விலங்குகளை தொடுவது, அதற்கு முத்தம் கொடுப்பது, விலங்குகள் மீது கை போட்டு நடந்து செல்வது என காட்டுக்குள் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை நாம் திரையில் காண முடியும். இதற்காக டைனோசர், புலி, சிறுத்தை, கரடி, கங்காரு, ஒட்டகச் சிவிங்கி, பென்குயின், பாண்டாகரடி, டால்பின், அனகோண்டா உள்ளிட்ட 10 வகையான விலங்குகளுடன் நாம் பயணிப்பது போல் திரை யில் காட்டுகிறார்கள். சுமார் 15 நிமிட நேரம் இது ஒளிபரப்பாகிறது. இதை பொதுமக்கள் பார்த்து மகிழ புதனன்று (டிச.25) முதல் துவங்கப்பட்டுள்ளது. இதனால், சிறுவர் பூங்காவில் குழந்தை களுக்கான கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.20 ஆகவும், பெரியவர்களுக்கான கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு ள்ளது.

;