“இந்துத்துவ கோட்பாட்டை மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து அரசுத் துறைகளில் திணித்து வருகிறது. மீண்டும் ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கும் மிக வேகமாக அரசு துறைகளின் மூலம் பிரச்சாரம் செய்வதற்கும் பாஜக அரசு துணிந்து விட்டது. தற்போது பிரசார் பாரதியின் இலச்சினையையும் காவி நிறத்தில் மாற்றியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தேர்தல் ஆணையம் இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை ஞாயிறன்று (ஏப்.21) அவரது இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் துரை வைகோ ஆகியோர் சந்தித்து பேசினர்.