தொழிலாளர் விரோத சட்டம் மற்றும் தேசிய கல்விக் கொள்கையை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக மதுராந்தகம் வட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுராந்தகம் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட பொருளாளர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் புஷ்பலதா, வட்டச் செயலாளர் சுதர்சன், இணைச் செயலாளர் பாக்கியராஜ், துறைவாரி சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.