சிதம்பரம், ஏப். 25- சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நடை பெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குநர் கிரன்குர்லா அண்ணாமலைநகர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி சால்வை அணி வித்து வரவேற்றார். இதனை தொடர்ந்து, பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ 70. 60 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் ரூ24.34 லட்சம் செலவில் நடைபெறும் புனரமைப்பு பணிகளையும், பூங்காக்களையும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அப்போது அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி பேரூராட்சிக ளின் இயக்குநரிடம் அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு சுகாதார பயன்பாட்டிற்கு வாகனம் வாங்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தார். இதனை ஏற்று அனுமதி அளிப்பதாக கூறினார்.