tamilnadu

img

அண்ணாமலைப் பல்கலைக்கழக  பேராசிரியருக்கு ஆராய்சியாளர் விருது

அண்ணாமலைப் பல்கலைக்கழக  பேராசிரியருக்கு ஆராய்சியாளர் விருது

சிதம்பரம், ஜூலை 18- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரிய ருக்கு வளர்ந்து வரும் வெல்டிங் (உலோகங்கள் இணைப்பு) தொழில்நுட்பத்தில் உலகின் தலைசிறந்த ஆராய்ச்சியா ளர்களுக்கான விருது சர்வதேச மாநாட்டில் வழங்கப் பட்டது. இத்தாலியின் ஜெனோவா நகரில் கடந்த மாதம் 78வது சர்வதேச வெல்டிங் (உலோகங்கள் இணைப்பு) மாநாடு நடை பெற்றது. இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், துருக்கி, கனடா, இந்தியா, ஜெர்மனி  உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு சர்வதேச மாநாட்டில் உலகின் தலைசிறந்த வெல்டிங் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளரைத் தேர்வு செய்து  அவருக்கு ஹலில்கயாகெடிக் என்ற உயரிய விருது வழங்கி கவுரவிப்பார்கள். 78வது சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலோ கங்கள் இணைப்பு (வெல்டிங்) ஆராய்ச்சி மைய இயக்குனர் வி.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு உலக அளவில் தலை சிறந்த வெல்டிங் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளராக தேர்வு  பெற்று ஹலில்கயாகெடிக் என்ற உயரிய விருதினைப் பெற்றார். முதன்முதலில் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டு விழா

இதனைத்தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக சுரங்கவியல் துறையில் அவருக்கு பாராட்டு விழா நடை பெற்றது. விழாவிற்கு சுரங்கவியல் துறை இயக்குனர் சி.ஜி சரவணன் தலைமை தாங்கினார். இதில், நெய்வேலி என்எல்சி இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன் கலந்து கொண்டு விருது பெற்ற பேராசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு மாலை அணி வித்து வாழ்த்து கூறினார்.