tamilnadu

img

தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்! பெண்ணாடம் பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்! பெண்ணாடம் பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சிதம்பரம், அக்.13 – தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில்  அதிமுக, பாஜக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கூறினார். கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் திட்டக்குடி வட்டம் சார்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும்  சிபிஎம் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டச் செயலாளர் வி.அன்பழகன் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் பி. முத்துலட்சுமி, பேரூ ராட்சி கவுன்சிலர் ஆர்.விஸ்வநாதன், வட்டக்குழு உறுப்பினர் என்.பரதன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, பெண்ணாடம் நகரம் எல்லையம்மன் கோவில்  தெருவில் புதி தாக ரூ.4 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகை யில், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிய மிக்கப்படுகிறார்கள், உள்ளாட்சித் துறையில் செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆணை யர் உள்ளிட்ட அலுவ லர்கள் நிரந்தர பணியாள ராகவும், தூய்மை பணி யாளர் உள்ளிட்டவர்கள் ஒப்பந்த பணியாளராக நியமிக்கபடுவதை சுட்டிக் காட்டியதுடன், இவர்களை நிரந்தப்படுத்துவதால் என்ன பெரிய இழப்பு வந்து விடப்போகிறது என்று கேள்வி எழுப்பினார்.  மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஒதுக்கிய அதிமுகவினர் தற்போது சட்டமன்றத் தேர்தலுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். என்றும், அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியை சந்திக்கும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் காதல் செய்தாலே சமூக விரோத செயலாக கருதி சாதிய ஒடுக்கு முறையால் பெற்ற பிள்ளைகளை தந்தை, தாய், உறவினர்களே கொலை செய்யும் மூர்க்கத்தனமான ஆணவக்கொலைகள் நடை பெற்று வருகிறது. இதே விருதாச்சலத்தில், கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணகி முருகேசன் கொலை செய்தார்கள். அதற்கு நீதி கேட்டு சிபிஎம் 23 ஆண்டுகள் தொடர்ந்து போராடி நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுக் கொடுத்ததை பாலகிருஷ்ணன் நினைவு படுத்தினார்.  இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், ஜி.ஆர் ரவிச்சந்திரன், எஸ்.பிரகாஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.ஜெய ராமன், கம்மாபுரம் ஒன்றியச் செயலாளர் கலைச் செல்வம், நெய்வேலி நகர செயலாளர் பாலமுருகன், விருதாச்சலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.குமரகுரு, வடலூர் நகர செயலாளர் இளங்கோவன், திருமுட்டம் வட்டச் செய லாளர் தினேஷ்பாபு, பெண்ணாடம் நகர செய லாளர் பி.அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.