tamilnadu

img

பேச்சுவார்த்தையில் உடன்பாடு மின் ஊழியர் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

சென்னை, செப்.27- தமிழ்நாடு மின்வாரியத்தில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், செயல்முறை ஆணை எண். 2, நாள் 12.4.2022ஐ ரத்து செய்ய  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்  நாடு மின் ஊழியர் கூட்டமைப்பு சார்பில் மின்சார வாரிய அலுவலகங்கள் முன்பு திங்களன்று (செப்.26) காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை மின்  வாரிய தலைமை அலுவலகத்திலும் காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்  செயலாளர் எஸ்.ராஜேந்திரன், தலைவர் தி. ஜெய்சங்கர், எஸ்.மூர்த்தி (தமிழ்நாடு எலக்ட்ரி கல் பெடரேஷன்), சந்திரசேகர் (ஏஇஎஸ் யூனி யன்), பாரி (ஜனதா சங்கம்), சேவியர் (ஐஎன்டி யுசி), ஏ.சேக்கிழார் (எம்ளாயிஸ் பெடரேஷன்) உள்ளிட்ட 15 சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும்  மேலாண்மை இயக்குநர் சங்க நிர்வாகிகளு டன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வாரிய செயல்முறை ஆணை எண். 2, நாள் 12.4.2022இல் பணியாளர்களை பாதிக்கக் கூடிய ஷரத்துகளை ரத்து செய்வதற்கு வரும்  28ஆம் தேதி நடைபெறவுள்ள வாரிய கூட்டத் தில் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு உரிய தீர்வு  காணப்படும். ரீடெப்ளாய்மெண்ட், அவுட்சோர்  சிங் குறித்து ஊதிய உயர்வு, வேளைப்பளு பேச்சுவார்த்தையின் போது தீர்வு காணப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து திங்கட்கிழமை இரவு 10 மணி யளவில் காத்திருப்புப் போராட்டம் தற்காலிக மாக விலக்கிக் கொள்ளப்படுவதாக நிர்வாகி கள் தெரிவித்தனர்.

;