உதயநிதி மீதான வழக்கு ஒத்திவைப்பு
புதுதில்லி, மார்ச் 4 - சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக, தன்மீது பல் வேறு மாநிலங்களில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு களை ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை திங்களன்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி தத்தா, “நீங்கள் சட்டப்பிரிவு 19(1)(a) படி சுதந்திரமாக பேசுவதற்கான உரிமையை தவ றாகப் பயன்படுத்தி உள்ளீர்கள். சட்டப்பிரிவு 25-ஐ மீறி யுள்ளீர்கள். தற்போது சட்டப்பிரிவு 32-ஐ பயன்படுத்தி பாது காப்பு கேட்கிறீர்கள்” என்றார். அதற்குப் பதிலளித்த உதய நிதி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “சனாதன தர்ம ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கை எதிர்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கவில்லை. அனைத்து வழக்கு களையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம்” என்றார்.
இதையடுத்து, “ஒரு மாநிலத்தின் அமைச்சரான நீங்கள் பேசும் போது பின் விளைவுகள் குறித்து சிந்திக்க வேண்டும். நீங்கள் பேசியதன் பின்விளைவுகள் குறித்து உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கை மார்ச் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
திருத்தம்
நேற்றைய (4.3.24) தீக்கதிர் 3வது பக்கத்தில் அரசுப் பள்ளிகளில் 3.31 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு என்று வந்துள்ள செய்தி தவறானது. அங்கன்வாடியில் இருந்து பள்ளிக்கு செல்லும் வயதை எட்டி யுள்ள 3.31லட்சம் மாணவர்களை சேர்க்க முயற்சிகளை மேற் கொள்ளுமாறு அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்ற றிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று கல்வித்துறை விளக்கம ளித்துள்ளது. தவறுக்கு வருந்துகிறோம்.
- ஆசிரியர்
மோடி வருகைக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக் கொடி
சென்னை, மார்ச் 4- கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் அணு உலை திட்டத்தை துவக்கி வைக் கவும், பாஜக பொதுக்கூட்டத்தில் பங் கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று தமிழகம் வந்தார்.
முன்னதாக, அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கே.வி. தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சென்னை, சைதாப்பேட்டையில் கருப் புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். “தமி ழக வெள்ள பாதிப்புகளுக்கு ஒரு பைசா கூட நிவாரணம் வழங்காத பிரதமர் மோடி, குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஒரு நீதி என பாரபட்சத்தை கடைப்பிடிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.