சென்னை,ஜூன் 17- தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி சென்னை ஆர்.ஏ.புரத்திலுள்ள எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் தலை மையிலான பாண்ட வர் அணியை எதிர்த்து நடிகர் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கர தாஸ் அணியும் களமிறங்கியுள்ளது. இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் அனுப்பும் பணி தொடங்கி யது. சேலம், தருமபுரி, மதுரை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள், துணை நடிகர்கள் மற்றும் வெளி யூரில் படப்பிடிப் பில் இருக்கும் நடிகர், நடிகை களுக்கு தபால் வாக்கு சீட்டுகள் அனுப்பி வைக் கப்பட்டு வருகிறது.